" தேடி கட்டிக்க போறேன் .... தாவி ஒட்டிக்க போறேன் ... தாலி கட்டிக்க போறேன் ..... நான் தான் ... ஏய் சண்டை .... " பிரமிளா செல்போனின் மேற்பரப்பை மெல்ல தடவி காதில் வைத்தாள் .
பிரமிளா : " ஹ்ம்ம் சொல்லுப்பா எங்க இருக்க "
ஜான் : " ஆபீஸ்ல , நீ போய் சேர்ந்துட்டியா ? "
பிரமி : " சேர்ந்துட்டேன் , ஏய் எங்க அண்ணன் கால் பண்ண சொல்லிருந்தான் , அவனக்கு போன் பண்ணிடு "
ஜான் : " சரி ! நான் பண்ணிக்கிறேன் , வெளிய பாத்தியா "
பிரமி : " ஒரு நிமிஷம்ப்பா .... ஆமா நீங்க பண்ண changes மட்டும் கமிட் பண்ணிடுங்க , நான் review பண்ணிட்டு merge பண்ணிடுறேன் ... oh ஓகே அது problem இல்ல ... ஹ்ம்ம் my pleasure ..... ஹே ஜான் சாரி இங்க teammate .. "
ஜான் : " ஹ்ம்ம் , நோ problem , வெளிய பாத்தியா "
பிரமி : " வெளிய என்ன , மேகமூட்டமா இருக்கு "
ஜான் : " ஹே , ஒரு விஷயம் கவனிச்சியா , நாம எப்ப போன் பண்ணாலும் climate மேகமூட்டமா மாறிடுது , actually இது தான் ரொமான்டிக் climate "
பிரமி : " ஹா ஹா ஜான் , கம் ஆன் , இது கோ-இன்சிடென்ட் , வேணும்னா நான் லஞ்ச் முடிச்சிட்டு பண்றேன் , கிளைமேட் மாறுதானு பார்ப்போம் "
ஜான் : " சரி பிரமி , எனக்கு மீட்டிங் time ஆயிடிச்சு , லஞ்ச் முடிச்சிட்டு பேசுவோம் ".
மூன்று மாத்திற்கு முன் :
ரேச்சல் : " ஹே ஜான் சொல்லுடா "
ஜான் : " நேத்து பொண்ணு பாத்துட்டு வந்தோம்ல , அவங்க அண்ணன் நம்பர் இருக்கா , சும்மா பேச "
ரேச்சல் : " அவங்க அண்ணன் கிட்ட என்ன சும்மா பேச போற , அந்த பொண்ணு நம்பர் இருக்கு தரவா ?"
ஜான் : " சரி தா , அந்த பொண்ணு கிட்ட நான் என்ன பேச போறேன் , அவகிட்ட அவங்க அண்ணன் நம்பர் வாங்கிக்குறேன் "
ரேச்சல் : " ஹே நடிக்காத , நான் உன் அக்கா , என்கிட்டயேவா , சரி ஏதோ பண்ணு , நம்பர whatsapp பண்ணி விடறேன் "
"என் சுவாச காற்றே வரும் பார்த்து உயிர் தாங்கி நான் இருப் .."
பிரமிளா : " ஹலோ "
ஜான் : " ஹலோ நான் ஜான் பேசுறேன் "
பிரமி : " எந்த ஜான் ?" , சிரித்தாள் மெல்ல ..
ஜான் : " நேத்து பார்த்தோம்ல , ஜான் , எப்படி இருக்கீங்க "
பிரமி : " ஓ ஜான் சொல்லுங்க , சாரி நான் நல்ல இருக்கேன் , நீங்க எப்படி இருக்கீங்க "
ஜான் : " நான் சூப்பரா இருக்கேன் , ஒன்னும் இல்லங்க சும்மா தான் போன் பண்ணேன் , உங்க அண்ணன் நம்பர் வேணும் "
பிரமி : " ஓ ... நான் கூட என்கிட்ட பேச தான் கூப்பிட்டீங்களோனு நினச்சேன் " சிரித்தாள்
ஜான் : " ஹா ஹா ஹா ... "
பிரமி : " நீங்க ஓகே சொன்னதா கேள்விப்பட்டேன் , உங்க family க்கு என்னை பிடிச்சிருக்கா "
ஜான் : " எல்லாருக்கும் , உங்கள பிடிச்சிருக்கு , உங்க பேமிலி க்கு என்ன பிடிச்சிருக்கா "
பிரமி : " பாத்தீங்களா எங்க பேமிலி க்கு பிடிச்சிருக்கானு கேக்குறீங்களே எனக்கு பிடிச்சிருக்கானு கேக்க மாட்டீங்களா "
ஜான் : " ஹா ஹா ஹா சாரி ங்க , உங்களுக்கு பிடிச்சிருக்கா " , வெட்கப்பட்டான்
பிரமி : " ஹ்ம்ம் "
ஜான் : " ............"
பிரமி : " என்ன ஜான் எதும் பேச மாட்டேங்கிறீங்க "
ஜான் : " ஒன்னும் இல்லங்க ஏதோ புதுசா feel பண்றேன் " .. நெஞ்சின் அடியில் இருந்து ஒரு இரசாயனம் அதிகமான மூச்சுக்காற்றை மூக்கின் வெளிய தள்ளி மூளைக்கு கொண்டு செல்வதை உணர்ந்தான் .
பிரமி : " ஹா ஹா ஹா "
ஜான் : " ஹா ஹா .. அப்புறம் சாப்பிடீங்களா "
உரையாடல் தொடர்ந்தது ... பன்மைகள் ஒருமை ஆகியிருந்தன , புதிதாக அறிமுகப்படுத்திய கைபேசி சேவையின் தயவால் அழைப்புகள் பன்மடங்காகி இருந்தன .... ஜானின் பள்ளி பருவ நண்பன் முதல் அவனுக்கு பிடித்த இசையமைப்பாளர் , பிடித்த வெளிநாடு வரை பிரமி அறிந்திருந்தாள் , அவனின் குடும்ப உறுப்பினர்கள் அவளுக்கு அத்துப்படி .... பிரமிளாவின் லக்கி நம்பர் இல் இருந்து அவள் அண்ணன் பிறந்தநாள் அவளின் கிட்டார் திறமை வரை ஜான் அறிந்திருந்தான் ... யாருமே படிக்காத அவள் எழுதும் வலைப்பக்கத்தில் இவன் ஒருவன் தான் வாசகன் ... பாராட்டாக மின் கைகுலுக்கல்கள் பரிமாறப்பட்டன .
Amazon ம் E - Bay ம் பரிசுகளை பரிமாற்றும் சேவையை செய்திருந்தன .
" எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் என்பதால் தொடாமல் போகிறன் , தேன் .."
பிரமி : " ஹே ஜான் , சொன்ன மாதிரியே வெளிய மேகமூட்டமா இருக்குப்பா "
ஜான் : " பிரமி , நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் , OMR கேக் கோர்னெர் வரியா "
பிரமி : " ஏய் எதுவா இருந்தாலும் போன்லயே சொல்லு , அவ்ளோ தூரம் நீ எப்படி வருவா "
ஜான் : " வேணா , நான் போன்ல சொன்னா நீ என்ன express பண்றனு என்னால பாக்க முடியாது .. நேர்ல வாயேன் "
பிரமி : " அப்படி என்ன சொல்ல போற , பரவா இல்ல போன்லயே சொல்லு "
ஜான் : " பிரமி , ப்ளீஸ் நேர்ல வாயேன் "
பிரமி : " சரி நான் கிளம்பிட்டேன் , நீ கிளம்பு உனக்கு தான் லேட்டாகும் "
ஜான் : " நான் already கிளம்பிட்டேன் , சீக்கிரம் வா"
OMR கேக் கோர்னெர்
பிரமி : " ஏய் ஏதோ முக்கியமான விஷயம்னு சொல்லிட்டு , ஹையா whiteforest சாப்பிட்டிட்டு இருக்க "
ஜான் : " ஹே பிரமி உட்காரு சொல்றேன் "
பிரமி : " நீ first சொல்லு "
ஜான் பிராமியின் கண்களை உற்று நோக்கி இருந்தான் , வெளியே மழை மேகங்கள் தூரலிட ஆரம்பித்தன ...
- தொடரும்