Monday, December 17, 2012

உலகம் அழியுமா




இன்று நான் மிகவும் சோர்ந்திருப்பதால் அலுவலக விடுப்பு எடுத்து வீட்டில் இருக்கிறேன் . நேரம் போகாமல் பதிவுலகில் உலாத்தி கொண்டிருக்கையில்  இந்த பதிவு சிக்கியது . தலைப்பு சுவாரசியமாக இருப்பதால் சிறுது நேரம் கவனத்தை நிறுத்தி படித்தேன் . பதிவு மிக வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்ததால் அதை அப்படியே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .

Hi Friends ,

கடந்த இரண்டு வருடமாக மக்கள் பயந்து கொண்டிருந்த நாள் இதோ இன்று . பல நூறு ஆண்டுகளாக இயற்கை அழிவுகளை துல்லியமாக கணித்த நம்  முன்னோர்களான  மாயன்களின்  காலண்டர் இன்றோடு  முடிகின்றது  . எதோ நிப்ரு என்ற கிரகம் பூமியை தாக்க போவதாகவும் அதனால் பூமியின் துருவங்கள் மாறபோவதாகவும் செய்தி பரவி இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகின்றன . இந்த வருடம் ஆரம்பம் முதல் வந்த போர் , புயல் , கொலை , கொள்ளை ,ஆட்சி மாற்றம் போன்ற செய்திகள் மக்களை மேலும் பீதி அடைய செய்தது .

பூமியெங்கும் இன்று சிறப்பு பூஜைகளும் , சுவிசேஷ கூட்டங்களும் , தொழுகைகளும் நடைபெற்றுகொண்டிருக்கின்றன . மக்களின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன . 

ஊழல் பெருச்சாளிகளும் , பணக்காரர்களும் தானம் தருமங்கள் செய்து சொர்க்கத்தில் தங்களுக்கான இடங்களை முன் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர் . நாத்திகம் பேசும் சிலர் ஆலயங்களில் தென்படுவதாக செய்திகள் வந்தன . 

மக்கள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து வீட்டில் குடும்பத்துடன் தொலைகாட்சியில் மூழ்கியிருந்தனர் . பூகம்பம் , சுனாமி போன்ற இயற்க்கை அழிவிலிருந்து  தங்களை காத்து கொள்வது எப்படி ? என்ற நிகழ்ச்சியை புகழ் பெற்ற தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பி கொண்டிருக்கின்றது .

இன்று நாள் முழுவதும் ஓடிவிட்டது , எந்த ஒரு வித்தியாச நிகழ்வுகளும் இல்லை . வழக்கமாக தொலைகாட்சிகள் காட்டும் கொலை,விபத்து , அரசியல் மோதல்  போன்ற செய்திகளும் இன்று இல்லை . மக்கள் திருந்திருப்பார்களோ !!!!

எதோ உலகம் அழிய போகின்றது என்று பயந்து அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்தது வீண் , இன்று மற்றுமொரு வழக்கமான நாள் . ஏதோ மாயன் காலேண்டர் முடிய போகுதாம் , போங்கயா போய் பொழப்ப பாருங்க எங்க வீட்டு காலேண்டர் கூட தான் இன்னும் பத்து நாள்ல முடிய போகுது ....

இப்படிக்கு ,
Charles  S 
12/21/2012



நீங்கள் மேற்கண்ட பதிவு 100 வருடங்களுக்கு முன்பு ஒரு சிறந்த பதிவரால் எழுதபட்டது . உலகம் இன்று அழியும் , நாளை அழியும் என்று மக்கள் பரப்பும் வதந்தி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது .   " இன்று உலகம் சூரிய ஒளியை
இழந்து , பூமி அதன் கோணத்தில் இருந்து எதிர் திசையில் சுழல ஆரம்பிக்கும் "
என்று ரஷ்ய விஞ்ஞானிகள் அறிவித்ததை தொடர்ந்து  விடுப்பு எடுத்து விட்டேன் . இன்று எனக்கும் ஒரு நாள் வீண் .


இப்படிக்கு ,
பிரபாகரன்
11/26/2202


Note:  Visit this link for more info http://www.nasa.gov/topics/earth/features/2012.html


Tuesday, December 4, 2012

பெயர் வைக்கவில்லை




போன தடவ சீரியஸா ஒரு கதை எழுதி செம பல்பு வாங்குன . நம்ம ஆளுங்களுக்கு
கொஞ்சம் வறட்சியா நல்ல கருத்துள்ள கதைய சொன்னா பிடிகிறதில்ல . என்ன பண்ணுறது  பயபுள்ளங்க ஷங்கர் , முருகதாஸ் , பவர் ஸ்டார் மாதிரி நல்ல மாஸ் + பிரமாண்ட கதைகள பாத்து வளந்துட்டாங்க , நம்ம தங்க பச்சான் மாதிரியோ இல்ல பாலாஜி சக்திவேல் மாதிரி கதை எழுதுனா யாரும் சீண்ட மாட்றாங்க.

அதான் இந்த தடவ ஒரு நல்ல பவர் புல் சப்ஜெக்டோட கதை எழுத  வந்துட்டேன் .
போன முறை நான் எழுதிய 'தற்கொலை' ங்கற கதைய படிச்சிட்டு ரொம்ப நல்லா இருக்குனு பாராட்டிய என் நண்பர்களின் வேண்டுகோளிற்கு இணங்க இம்முறையும் ஒரு திகில் கதை தான் .

வழக்கமா திகில் கதை எழுதறவங்க ஏதாவது படத்துல இருந்து சுட்டோ இல்ல யாராவது சொல்லும் திகில் கதைகளை வைத்தோ எழுதி ஒப்பெத்திருவாங்க . ஆனா நான் எழுதுற கதை இயற்கையா இருக்கணும்னு சொன்ன போது வருகிற 10 ஆம் தேதி இரவு 1 மணிக்கு என்னுடன் சுடுகாடு வரை வந்து நான் கதை எழுதி முடிக்கும் வரை காத்திருப்பதாக வாக்களித்த நண்பர்கள் MR . கார்த்திக் மற்றும் Mr . ராகுல் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அது கூட பரவாயில்லங்க எங்க ஏரியா பக்கத்தில் இருக்கும் ரவுடி ஏரியாவான
'தோகூர் ' இல் யாரிடமாவது வம்பிழுத்து அவர்கள் வெட்டுவதற்கு துரத்தும் காட்சிகளை வைத்து நான் தத்ரூபமாக திகில் கதை எழுதுவதற்கு இந்த வாரம் சனிக்கிழமை வம்பிழுக்க செல்லவிருக்கும் நண்பர்கள் Mr  ஜனார்த்தனன் , Mr . ஹரிஹரன் , Mr .கோபிநாத் ,Mr வெங்கடேஷ் மற்றும் Mr சுதாகர் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

நண்பர்களே ! என் கதையின் மீது வெறி கொண்டு நீங்கள் எடுக்கும் பிரயத்தனங்களுக்கு நன்றி ! ஆனால் நான் ஆஸ்கார் வாங்குவதற்காக உங்களை ஆஸ்பித்திரி அனுப்பும் அளவு நான் சுயநலவாதி அல்ல  . ஆகையால் நீங்கள் பொருளதவி மட்டும் செய்தால் போதும் என் திகில் கதைக்கான கருவை நானே தேடி விட்டேன் .

கதைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை , பெயர் வைக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன் . நல்லா கிலி ஊட்டும் திகில் பெயரா சொல்லுங்க .


எடுத்து காட்டு பெயர்கள் :

ரத்த கிளறி 

நாக்கு தள்ளுது 

அல்லு வுட்டுரிச்சி

பயமா இருக்கு 

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ 

நீயாஆஆஆஆஆஆஆ