கொஞ்சம் வறட்சியா நல்ல கருத்துள்ள கதைய சொன்னா பிடிகிறதில்ல . என்ன பண்ணுறது பயபுள்ளங்க ஷங்கர் , முருகதாஸ் , பவர் ஸ்டார் மாதிரி நல்ல மாஸ் + பிரமாண்ட கதைகள பாத்து வளந்துட்டாங்க , நம்ம தங்க பச்சான் மாதிரியோ இல்ல பாலாஜி சக்திவேல் மாதிரி கதை எழுதுனா யாரும் சீண்ட மாட்றாங்க.
அதான் இந்த தடவ ஒரு நல்ல பவர் புல் சப்ஜெக்டோட கதை எழுத வந்துட்டேன் .
போன முறை நான் எழுதிய 'தற்கொலை' ங்கற கதைய படிச்சிட்டு ரொம்ப நல்லா இருக்குனு பாராட்டிய என் நண்பர்களின் வேண்டுகோளிற்கு இணங்க இம்முறையும் ஒரு திகில் கதை தான் .
வழக்கமா திகில் கதை எழுதறவங்க ஏதாவது படத்துல இருந்து சுட்டோ இல்ல யாராவது சொல்லும் திகில் கதைகளை வைத்தோ எழுதி ஒப்பெத்திருவாங்க . ஆனா நான் எழுதுற கதை இயற்கையா இருக்கணும்னு சொன்ன போது வருகிற 10 ஆம் தேதி இரவு 1 மணிக்கு என்னுடன் சுடுகாடு வரை வந்து நான் கதை எழுதி முடிக்கும் வரை காத்திருப்பதாக வாக்களித்த நண்பர்கள் MR . கார்த்திக் மற்றும் Mr . ராகுல் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அது கூட பரவாயில்லங்க எங்க ஏரியா பக்கத்தில் இருக்கும் ரவுடி ஏரியாவான
'தோகூர் ' இல் யாரிடமாவது வம்பிழுத்து அவர்கள் வெட்டுவதற்கு துரத்தும் காட்சிகளை வைத்து நான் தத்ரூபமாக திகில் கதை எழுதுவதற்கு இந்த வாரம் சனிக்கிழமை வம்பிழுக்க செல்லவிருக்கும் நண்பர்கள் Mr ஜனார்த்தனன் , Mr . ஹரிஹரன் , Mr .கோபிநாத் ,Mr வெங்கடேஷ் மற்றும் Mr சுதாகர் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
நண்பர்களே ! என் கதையின் மீது வெறி கொண்டு நீங்கள் எடுக்கும் பிரயத்தனங்களுக்கு நன்றி ! ஆனால் நான் ஆஸ்கார் வாங்குவதற்காக உங்களை ஆஸ்பித்திரி அனுப்பும் அளவு நான் சுயநலவாதி அல்ல . ஆகையால் நீங்கள் பொருளதவி மட்டும் செய்தால் போதும் என் திகில் கதைக்கான கருவை நானே தேடி விட்டேன் .
கதைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை , பெயர் வைக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன் . நல்லா கிலி ஊட்டும் திகில் பெயரா சொல்லுங்க .
எடுத்து காட்டு பெயர்கள் :
ரத்த கிளறி
நாக்கு தள்ளுது
அல்லு வுட்டுரிச்சி
பயமா இருக்கு
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
நீயாஆஆஆஆஆஆஆ
.jpg)
No comments:
Post a Comment