Friday, October 5, 2012

பதில் சொல்லுங்க பார்ப்போம் -1




1 .ஒரு மேஜையின் மீது மூன்று பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன . ஒரு பெட்டியினுள் தங்கம் உள்ளது மற்ற இரு பெட்டிகள் காலியாக உள்ளன .
பெட்டிகளின் மீது குறிப்புகள் ஒட்டப்பட்டுள்ளன . அவற்றுள் ஒரு குறிப்பு உண்மையானவை மற்ற இரு குறிப்புகள் பொய்யானவை .

முதல் பெட்டியின் மீது               " இதில் தங்கம் இல்லை " என்றும் ,
இரண்டாம் பெட்டியின்  மீது     "இதில் தங்கம் இல்லை " என்றும் ,
மூன்றாம் பெட்டியின் மீது       " இரண்டாம் பெட்டியில் தங்கம் உள்ளது " என்றும்  ஒட்டப்பட்டுள்ளன .

உண்மையில் தங்கம் எந்த பெட்டியில் உள்ளது ?



2 . 1 , 11 , 21 , 1211 , 111221 , __________

இந்த தொடரில் அடுத்த எண் என்ன ?



3 . இரு தந்தைகள் தங்கள் மகன்களை கூட்டி கொண்டு கடை தெருவுக்கு சென்றனர் . ஒவ்வொரு தந்தையும் மகனும் தலா ஒரு பழம் வாங்கினர் . அவர்கள் வீடு திரும்பும் போது கையில் மூன்று பழங்கள் தான் இருந்தது.
அவர்கள் பழங்களை தூக்கி எறியவோ சாப்பிடவோ இல்லை . இது எவ்வாறு சாத்தியம் ?

4 . கோவிந்தன் ஒரு தொழிற்சாலையில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தான் . ஒரு நாள் கோவிந்தனின் முதலாளி அவனிடம் " நான் இலங்கைக்கு ஒரு வேலையாக விமானத்தில் செல்கிறேன் வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும்" என்று கூறினார் .  அதற்கு கோவிந்தன் " நான் இன்று இரவு கனவில்  இலங்கைக்கு செல்லும் விமானம் வெடித்து சிதறுவதைப் பார்த்தேன் ஆகையால் தயவு செய்து படகில் செல்லுங்கள்" என்று கூறினான் . முதலாளியும் இது போன்ற விஷயங்களில் நம்பிக்கை கொண்டவராதலால் படகில் இலங்கைக்கு சென்றார் . இலங்கை சென்ற பின்னர் கோவிந்தன் சொன்னது போல அவர் வந்திருக்க வேண்டிய விமானம் வெடித்து சிதறிய செய்தியை கேட்டு அதிர்ந்தார் . உடனே ஊருக்கு சென்று கோவிந்தனை கௌரவித்து அவனை வேளையில் இருந்து தூக்கி விட்டார் . அது ஏன் ?

5. மாடசாமி ஒரு பால்காரன் . அவனிடம் 3  லிட்டர்  மற்றும் 5 லிட்டர் அளப்பான்கள் ( can  ) மட்டுமே உள்ளன . அவன் இப்பொழுது இந்த அளப்பான்களை கொண்டு நான்கு லிட்டர் பாலை அளக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் ?

6. ராகினி , ரோகினி , ரூபினி  ஆகிய மூவரும் சுந்தர் , வினோத் மற்றும் அசோக்கின் மகள்கள் . இவர்களில் நான்கு பேர் கலப்பு இரட்டையர் டென்னிஸ் ( mixed  doubles ) விளையாடினர் . அசோக்கின் மகளும்  சுந்தரும் இணைந்து விளையாடினர் . ராகினியின் தந்தையும் வினோத்தின் மகளும்  இணைந்து விளையாடினர் . இவற்றில்  தந்தையும் மகளும் இணைந்து விளையாட முடியாது .

ராகினியின் தந்தை யார்?

பதில்களை பின்னூட்டமாக ( comments ) தெரிவிக்கவும் .





No comments:

Post a Comment