Thursday, May 14, 2015

தாலி

சமீபத்தில்  தி.க வினர் நடத்திய தாலி அகற்றம்  மற்றும் மாட்டு கறி விருந்து  போராட்டம்/விழா தமிழகமெங்கும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது .

இந்த விழா நடைபெறும் இடத்தில் போராட்டம் செய்வோமென்று இந்து மக்கள் கட்சி  , பா. ஜனதா  மற்றும் சில அமைப்புகளும் அறிக்கையிட்டனர் .

"தாலி" கடந்த 15 நூற்றாண்டுகளாகத்தான் அதிகமாக இந்திய திருமணங்களில் , இலக்கியங்களில் காணப்படுகிறது . பெரும்பாலும் இந்தியர்கள் தாலியை ஒரு மதம் சார்ந்ததாகவோ அல்லது ஒரு சடங்காகவோ பார்ப்பதில்லை , அது அவர்களின் உணர்வு சார்ந்த அடையாளமாக இருக்கிறது .

அதனால் தான் இன்றும் கூட கிறிஸ்துவர்கள் , முஸ்லிம்கள் திருமணங்களில் தாலி இடம்பெற்றுள்ளது ( ஒரு சில பிரிவினரை தவிர ) .



தமிழ் திரைப்படங்களில் தாலியை  மையமாக வைத்து கிட்டத்தட்ட 50 படங்கள் வெளியாகி இருக்கும் . அனைத்து திரைப்படங்களிலும் தாலி கட்டியவன் எப்படி பட்டவனாயிருந்தாலும் அவனுடன் தான் அந்த பெண் காலம் முழுக்க  கண்ணீர் விட்டு வாழ வேண்டும் .

பெரும்பாலும் இந்திய திருமணங்களில் மிக முக்கியமான நிகழ்வு மாங்கல்யம் கட்டுவதாகத் தான் இருக்கும் .கடன் பட்டு வீடு,வாசலென மொத்தமும் இழந்தாலும் பெண்கள் தாலி தங்கத்தை மட்டும் விற்க மாட்டார்கள் .

தாலிக் கட்டுவதை எதிர்போரின் வாதங்கள் இவை

  • தாலி பெண்களை ஆண்களுக்கு கீழ்ப்பட்டவள் என உணர்த்துவதாக உள்ளது 
  • " தாலி பெண்களுக்கு வேலி " என சொல்கிறீர்கள், ஆனால் தற்போதைய சமுகத்தில் பெரும்பாலான பெண்கள் தங்க சங்கிலியில் தாலியை கோர்த்துள்ளனர் . இது பெரும்பாலும் ஒரு பெண் திருமணம் ஆனவளா அல்லது ஆகாதவளா என்று கண்டு பிடிக்க இயலாத வகையில் உள்ளது . இதில் எங்கிருந்து தாலி பாதுகாப்பு அளிக்கிறது ?
  • திருமணத்தை ஒரு கயிரினில் அடக்கி வைக்காதீர்கள் 
  • பெண்களுக்கு மட்டும் ஏன் தாலி , ஆண்கள் திருமணமானவர்கள் என்பதற்கான வெளிப்படையான அடையாளம் என்ன ?
  • திருமணத்திற்கான அத்தனை ஆடம்பரங்களும் செலவுகளும் தாலி கட்டும் நிகழ்வை சுற்றியே நடக்கிறது , தாலியை நீக்கும் போது இந்த செலவுகளும் சடங்குகளும் தானாகவே நீக்கப்படும் 

இது இவுங்க பக்கம்னா , தாலியை ஆதரிப்போர் சொல்வது :


  • தாலி ஒரு பெண்ணோ அல்லது  ஒரு ஆணோ திருமண உறவில் இருந்து விலகி செல்ல எண்ணும் பொழுது , அவர்களுக்கு அபாய மணி அடிப்பதாக உள்ளது .
  • தாலி மட்டும் தான் இன்னும் இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாய் எஞ்சி நிற்கிறது .

இது இருக்கட்டும் நீங்க சொல்றீங்கன்னு கேக்குறீங்களா ?

தாலி என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை ஆதரிக்க கூடாது , 
உதாரணமாக " ஒருத்தன் ஒரு பெண்ணுக்கு அவளது அனுமதி இல்லாமல் தாலி கட்டினால் அவன் கூட தான் வாழனும்  , தாலி காட்டினவன் தீவிரவாதியாகவே இருந்தாலும் அவன் தான் பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் துணை . " இது போன்ற நம்பிக்கைகள்  அகற்றப்பட வேண்டும் .


அதே சமயத்தில் 15 நூற்றாண்டுகளாக தமிழர் உணர்வுகளோடு ஒன்றிய தாலியை புரட்சி என்ற பெயரில் ஒரே நாளில் அறுத்தெறிய சொல்வது அவர்களை புண்படுத்த தான் செய்யும் .

ஆனால் தாலி வேண்டுமா ? வேண்டாமா ? என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் நாம் அல்ல பெண்கள் தான் .

No comments:

Post a Comment