கீழ் வானம் கதிரவனை வழி அனுப்பி விட்டு சந்திரனை வரவேற்க ஆயத்தமாய் தன் நிறத்தை மாற்றி கொண்டிருந்தது . சிவப்பு , நீலம் , வெள்ளை , மஞ்சள், பழுப்பு , கருப்பு ... வானத்திற்கு தான் எத்தனை நிறங்கள்....
மனிதர்களை போல வானம் அதன் நிறம் மாறும் தன்மையால் வசை வாங்குவதில்லை .....
அந்த பழுப்பு நிற சாரை பாம்பு வெளியே வர எத்தனிக்க , தவிட்டு குருவிகள் அதன் பொந்தை சுற்றி வலம் வந்துக்கொண்டிருந்தன .
பால் மடி சற்றே வற்றிய மாடுகள் வைக்கோல் கிழிசலை அசைப்போட்டுக்கொண்டிருந்தன.
பாக்கியா கழத்துமேட்ட வெறித்தப்படியே முதுமை பறித்தது போக மிச்சமிருந்த முடியை தடவிய வாறே வீட்டை நோக்கி நடந்துக்கொண்டிருந்தார்.
" என்ன மாமாச்சி ரெட்டியார் என்ன சொல்றான் , தண்ணி கேட்டியா " எதிரில் வந்த செல்வராஜ் பாக்கியாவிடம் .
" கேட்டேன் ஏற்கனவே பெருமாள் கேட்டிருக்கானாம் , அடுத்த வருஷம் பாக்கலாம்னு சொல்லிட்டான் ... போன வாரம் ஆறுமுகம் தண்ணி விடுறான் சொன்னான் அதை நம்பி வாய்க்கால் வெட்டிட்டேன் .... கடைசில அவன் தம்பி மலாட்ட போடுறான் அதுக்கு தண்ணி வேணும் முடியாதுன்னு சொல்லிட்டான் "
தூரத்தில் மாரியம்மன் அம்மன் கோவில் மைக் செட் ஒலி எழுப்ப தொடங்கியது ...
" என்னமோ போ மாமாச்சி , இப்படியே நீயும் 5 வருஷமா ஏமாந்துட்டு தான் இருக்க , கழனி என்னன்னா அங்க கரம்பா இருக்கு , சேகரு உன் கழனி வழியா தான் அவன் லாரிய ஒட்டிக்கினு போறான் "
"ப்ச்" பாக்கியா உதட்டை பிதுக்கினார்.
" சரி அத்தையை கேட்டதா சொல்லு , நான் இந்த பானையை கட்டிட்டு வரேன் , நம்ம பாய் வீட்டுக்கு ஆள் வரங்களாம் நாளானைக்கு கல்லு கேட்டாரு " செல்வராஜ் வாயில் குதுப்பிய பாக்கின் சாறை சிறிது முழிந்து கிளம்பினான் ...
மணியம்மை காய்ந்த புங்கை மர சருகுகள் சேர்த்து அவற்றை உறையாக்கி சாணி அள்ளி கொண்டிருந்தாள்.
மதியம் மணியம்மையிடம் கல்லடி வாங்கிய ஜாக்கி மெல்ல ஓடி சென்று புளிய மரத்தடியில் அமர்ந்தது .
' ஜாக்கி ' பாக்கியாவின் பேத்தி அதற்கு வைத்த பெயர்.
பாக்கியா புளியமரத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த பானையில் தண்ணீர் மோந்து காலின் மீது ஊற்றினார் .
"ஏம்மா அந்த மம்மூட்டி கடப்பாரை கொண்டு வா .." சொல்லிவிட்டு வீட்டின் பின்புறம் சென்றார் ..
நெல்லை கொறித்த கோழிகள் தங்கள் கூண்டை அடைந்தன.
மணியம்மை சாணியை கூடையில் அள்ளி கொட்டிவிட்டு , கைகளை அலம்பி மண் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கடப்பாரை மம்மூட்டி எடுத்துக்கொண்டு பின் புறம் சென்றாள்.
" ரெட்டியார் என்ன சொல்றாப்ல"
" அந்த கடப்பாரையை குடு ..."
மணியம்மை புரிந்து கொண்டாள்....
வேலிக்கத்தான் செடியிடம் தன் ஈரப்பதத்தினை பறிக்கொடுத்த காற்று வேப்ப மரத்தினை மோதி தன் சக்தியை சோதித்து கொண்டிருந்தது .
" எவ்ளோ நாள் தான் ஊருக்கு தெரியாம இதை பண்ண போற , ஒரு வார்த்த புள்ள கிட்ட சொல்லிடுவோமா "
பாக்கியா எதுவும் பேசவில்லை , தென்னை மர ஓலைகளை அகற்றுவதில் மும்மூரமாயிருந்தார்.
தென்னை ஓலையில் ஒட்டியிருந்த மரவட்டை ஓலையின் அசைவினால் தன் உடலை சுருட்டி கொண்டது .
தென்ன ஓலைகளை அகற்றி அதன் அடியில் இருந்த குழியில் கடப்பாரையை போட்டார்.
அந்த குழியில் அமைந்திருந்த மண் படிக்கட்டினை லேசாக மிதித்து கீழே இறங்கினார் .
மணியம்மை பாத்திரங்களை அடுப்பு கரியினை தொட்டு தேங்காய் நாறினால் தேய்க்க தொடங்கினாள்.
வானம் கரிய நிறம் அடைய தொடங்கியது.
மணியம்மை வைத்த வாளை கருவாட்டு குழம்பின் மனம் ஜாக்கியின் வாயில் நீர் சுரக்க வைத்தது.
பாக்கியா கடப்பாரையை கழுவி வைத்து விட்டு வீட்டினுள் நுழைந்தார்.
" உட்காரு ஒரு நிமிஷம் முட்ட பொறிச்சி எடுத்துட்டு வரேன் "
பாக்கியா சாணி மொழுகிய மண் தரையில் துண்டை விரித்து அமர்ந்தார் .
கொழுத்த வெள்ளை பூனை கருவாட்டு குழம்பின் மணத்தின் தூண்டலில் செம்பருத்தி செடியின் அடியில் பதுங்கியிருந்தது ...
மணியம்மை சோற்றை பரிமாறினாள்...
" இன்னும் எவ்ளோ நாள் தான் தோண்ட போற ... இப்போவே பார தட்ட அரம்பிச்சிடிச்சு ... பேசாம புள்ள கிட்ட சொல்லிடிவோம் ...." மணியம்மை ஆரம்பித்தாள்...
" எங்கப்பா நீரோட்டம் பாத்த இடம் அது .. கண்டிப்பா தண்ணி வரும் ... ஓரு மாசம் பொறுத்துக்கோ ... பாறை மேலோட்டமா தான் இருக்கு நாளைக்கு கோனார் கிட்ட சுத்தி வாங்கி உடைக்க போறேன்..."
மணியம்மை தயிரை ஊற்றினாள்...
பாக்கியா சாப்பிட்டுவிட்டு மீதி சோற்றினை ஜாக்கிக்கி வைத்தார் ..
அவர்கள் ஒரே தட்டு சோற்றினை சாப்பிடும் பங்காளிகள் ..
ஏழு மாதங்கள் உருண்டோடின ..
அன்று மாலை பாக்கியா கழனியில் இருந்து வீடு திரும்பி இருந்தார் ... வானம் செந்நிறம் ஆகி இருந்தது.
வீட்டு வாசலில் கோபியின் செருப்பு , வெளியே திவ்யா பணங்காய் சக்கர வண்டியை உருட்டி விளையாடி கொண்டிருந்தாள்....
"திவ்யா குட்டி எப்போ வந்த ?"
"இப்போ தான் , புளிய மரத்தில ஊஞ்சல் கட்டுரியா தாத்தா "
"இரு வரேன் "
ஜாக்கி திவ்யாவின் அருகே அந்த பணங்காய் வண்டியை வெறித்த படியே அமர்ந்திருந்தது.
"என்னப்பா எப்படி இருக்க , கமலா வரலையா "
"ஹ்ம்ம் இருக்கேன் , அவ்ளோ பெரிய குழி எதுக்கு பா வீட்டுக்கு பின்னாடி வெட்டி இருக்க , அம்மாட்ட கேட்டாலும் ஏதும் சொல்லமாட்டேன்கிது "
பாக்கியா மண் திண்ணையில் அமர்ந்து அந்த கிணற்று குழியை வெறித்தபடியே இருந்தார் ...
" சொல்லுப்பா , வீட்டை சுத்திரி மண்ணு கொட்டி மேடாக்கி இருக்க ... ஏதாவது புதையல் கிதயல் தேடுரியா " கோபி பொரிந்தான்..
"கிணறு வெட்டுறேன்பா , ஊரே தண்ணி இல்லாம 5 வருஷமா காஞ்சி கிடக்குது ... ரெட்டியாரும் கைய விரிச்சிட்டான்... நம்ம கழனி கரம்பா இருக்குப்பா "
"பா என்ன விளையாடுரியா , அவன் அவன் 400 அடி 500 அடி தோண்டியே தண்ணி வரல நீ அம்பது அடி கூட தோண்டி இருக்க மாட்ட இதுல எப்படி தண்ணி வரும் .. "
முருங்கை மரத்தில் இருந்த கம்பளிப்பூச்சி மெல்ல மேலே ப்ரயானப்பட்டது.
சிறிது நேரம் மணியம்மை கோபி பாக்கியா வாதங்கள் தொடர்ந்தன .
"பா எப்படியோ பண்ணிட்டு போங்க , நல்ல வேல என் பொண்டாட்டி வரல ... இல்லனா இந்த கூத்த அவங்க அம்மா வூடு பூரா பரப்பி இருப்பா "
"மா நா காலம்பர களம்புறேன் .."
பாக்கியா எதுவும் பேசி கொள்ள வில்லை , அவர் கவலை இன்றைக்கு குழியை தோண்ட முடியாதது தான் .
"என்ன எதுவும் பேசாம வந்துட்ட , அவன் மூஞ்சி கழுவ பின்னாடி போனான் , அப்போ குழிய பாத்துட்டான் " மணியம்மை ஆரம்பித்தாள் .
"விடு , என்னைக்கு இருந்தாலும் தெரியதானே போகுது , ஊருக்காரணுகளுக்கு தெரிஞ்சா கேலி பண்ணுவானுங்க புள்ள தானே அதான் கோவப்படுறான் .... நீ திவ்யாவுக்கு சோறு ஊட்டி விடு.."
அன்றிரவு பாக்கியா சரியாக சாப்பிடவில்லை , பங்காளி ஜாக்கி மட்டும் நிரம்பிய வயிருடன் உருண்டது...
அதிகாலை பனி வயல் வெளிகளில் மீது போர்வை போல படர்ந்து இருந்தது...
கோபி மாடத்தில் இருந்த கரி துண்டை நுணுக்கி பல் தேய்த்து கொண்டிருந்தான்...
மாடுகளை பெருமாள் சொசைட்டிக்கு ஓட்டி சென்றார்..
"மா அப்பா எங்க ஆள காணோம் ... "
கோழி கூண்டின் முன் இருந்த பலகையை திறந்த மணியம்மை " தெரியலையே எங்காவது வெளிக்கு போய் இருக்கும் .. நீ திவ்யாவை எழுப்பி கிளப்பு"
முகத்தை கழுவ பின் பக்கம் சென்ற கோபி "மா" என்று கத்தினான் ..
மணியம்மை ஓடி சென்று பார்க்கும் போது கோபி அந்த குழியின் அருகே முழங்காலிட்டு தலையை குழிக்குள் விட்டிருந்தான் ..
மணியம்மைக்கு நெஞ்சு படபடத்தது...
"என்ன ஆச்சுடா "
"மா,இங்க வந்து அப்பாவ பாரேன் "
திவ்யா அதற்குள் எழும்பி விட்டாள்... ஜாக்கி மணியம்மையை பின் தொடர்ந்தது ..
பாக்கியா கிணற்றின் கடைசி படி அருகில் இருந்தார் ... அவர் முட்டி வரை சேறு கலந்த நீர் இருந்தது ..
மணியம்மை கண்ணில் நீர் கசிந்தது ..
" ஏண்டி பாத்தியா ... 10 மாச உழைப்பு ... இது தண்ணி இல்ல இந்த பூமி தாயின் சதைக்கு அடியில இருக்க ரத்தம் ...
அந்த ரெட்டி என்ன எனக்கு தண்ணி தர்றது ... நாம அடுத்த மாச நடவு நடறோம் " பாக்கியா சந்தோஷத்தில் வாய் குழற வார்த்தைகளை அடக்கினார்...
" டேய் கோபி இதான் நான் தேடுன புதையல் ..." சொல்லும் போதே பாக்கியாவின் முகத்தில் பெருமை தெரிந்தது...
பாக்கியா மேலே ஏறி வந்தார் .. அவர் காலில் சேருடன் கொய்யா மர செருகளும் ஒட்டி இருந்தன ...
" திவ்யா குட்டி நீ அடுத்த தடவை வரும் தாத்தா வீட்டுல நீ விளையாடுறதுக்கு தண்ணி தொட்டி இருக்கும்.... ..." பாக்கியா சந்தோஷத்தில் பெருமூச்சு வாங்க பேத்தியிடம்
கோபியும் மணியம்மையும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர் ...
சூரியன் அந்த நீரில் விழுந்து அதையும் நிறமாற்றி ஆக்கியிருந்தது...
இன்று பாக்கியநாதன் கிணறு என்று சொன்னால் அந்த ஊரில் தெரியாத ஆளே கிடையாது ...

Very nice story
ReplyDeleteSuper 👌
ReplyDeleteNice story with real feelings
ReplyDelete