ஜான் : " ஏ பிரமி நான் சொல்றேன் , நீ first உட்காரு "
பிரமி கழுத்திலிருந்த அலுவலக அடையாள அட்டையை கழற்றி தன் கைப்பையினுள் வைத்தாள் .
ஜான் : " பிரமி கேக் சாப்பிடுரியா.. "
பிரமி: " ஜான் விளையாடாத , ஈவினிங் ஒரு மீட்டிங் இருக்கு அதை விட்டுட்டு வந்திருக்கேன் ... எதுக்கு அவசரமா வர சொன்ன அதை சொல்லு .. "
ஜான் : " சும்மா உன்ன பாக்கணம்னு தோணிச்சு அதான் வர சொன்னேன் ... ஏன் உன்ன பாக்க கூடாதா ...." ஜான் கண்ணடித்தான் ..
அடுக்களையிலிருந்து கிளம்பிய choco velvet கேக் மணம் மழையினால் கிளம்பிய மண் மணத்தோடு சேர்ந்து இதம் அளித்தது.
பிரமி : " சரியான சாடிஸ்ட் நீ .... " பொய் கோபம் காட்டினாள் .
"வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா .. விளையாட ஜோடி தேவை .... .."
பிரமி : " ஹலோ .. அ ... அருண் , ஒரு பர்சனல் விஷயமா சீக்கிரம் கிளம்பிட்டேன் , நீங்க மீட்டிங் அட்டெண்ட் பண்ணிட்டு ஸ்டேட்டஸ் share பண்ணுங்க , ..... தங்க்ஸ் அருண் ... பாய் "
ஜான் அந்த white forest கேக்கை பிரமிளவின் அந்த அழகிய பிம்பத்தோடே உள்ளே தள்ளி கொண்டிருந்தான்
பிரமி : " பாரு ..எல்லாம் உன்னால .. இப்படி ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு permission போட்டுட்டு வந்திருக்கேன் ... நீ என்னன்னா ஜாலியா கேக் சாப்பிட்டிட்டு இருக்க..."
ஜான் : " இல்ல பிரமி , ஒரு ஷார்ட் டைம் அசைன்மெண்ட் .... நெஸ்ட் வீக் கனடா போக சொல்றாங்க .. அத சொல்ல தான் கூப்பிட்டேன் "
வெளியே அடை மழை பெய்ய தொடங்கியது ....
பிரமி : " என்ன ஜான் விளையாடுரியா ... இன்னும் நம்ம கல்யாணத்துக்கு ஒரு மாசம் தான் டைம் இருக்கு ... நீ முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே ... எங்க வீட்ல தெரிஞ்சா டென்ஷன் ஆகிடுவாங்க " பிரமிளா பொறிந்தாள்
ஜான் : " பிரமி , புரிஞ்சிக்கோ ஒரு முக்கியமான அசைன்மெண்ட் , வேர ஆள் இல்ல .. உங்க வீட்ல நான் பேசிக்கிறேன் ... ஜூஸ்ட் 1 வீக் அசைன்மெண்ட் தான் ..."
அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ஜானும் white forestum பிரமிளாவை சம்மதிக்கவைத்தனர்....
அடுத்த இரு நாட்களில் ஜான் மட்டும் இரு வீட்டாரையும் சம்மதிக்க வைத்தான்....
"உசுரு தவிச்சிருக்கு எப்போ வருவ நீ ..."
பிரமி : " சொல்லு கவி .. நான் ஏர்போர்ட்ல இருக்கேன் .. இன்னிக்கு ஜான் கனடா போறாரு அதான் sendoff பண்ண வந்தோம் .... சரிடி நான் அப்பொறம் கால் பன்றேன் ... "
ஜான் : " பிரமி ... பாத்தியா இப்பவும் climate மேக மூட்டமா தான் இருக்கு .....ஒரு வாரம் உன்ன விட்டு பிரியிறேன் .. ஏதும் இல்லயா .." ஜான் மெல்லிய குரலில் .. லேசான வெட்கத்துடன் ..
பிரமிளா சுற்றி பார்த்தாள் ... இரு வீட்டாரும்
நாகரிகம் கற்றவர்கள் .. அவர்களை கண்டு கொள்ள வில்லை ...
" எது வரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் என்பதால் விடாமல் கேட்கிறேன்..."
விஜய் : " ஜி ... ஏர்போர்ட் போய்டீங்களா ... வரும் போது மறக்காம ஐபோன் வாஙகிட்டு வாங்க "
ஜான் : " சரி ப்ரோ , நான் அப்புறம் கூப்புடுறேன் "
ஜான் தவிப்பதை பார்க்க பிரமிளாவிற்கு சிரிப்பு வந்தது ...
அந்த விமான சேவையின் இறுதி அழைப்பு ஒலிக்க சற்றே ஏமாற்றத்துடன் .. ஜான் புறப்பட்டான்
" என் சுவாச காற்றே வரும் பாதை பார்த்து உயிர் தாங்கி நான் ..."
ஜான் : " ஹலோ .. எப்படி இருக்க ... "
பிரமி : " ஹ்ம்ம் ... உன் callukku தான் வெய்ட் பண்ணிட்டி இருந்தேன் "
ஜான் : " இன்விடேஷன் அந்த maroon design நல்லா இருக்கு ... அதையே போட சொல்லு "
பிரமி : " ஹ்ம்ம் .. அங்க climate எப்படி இருக்கு ... "
ஜான் : " இங்க மழை மேகம் மூடிட்டு இருக்கு .. பிரமி ...ஒரு கவிதை எழுதி இருக்கேன் கேக்குரியா ... "
பிரமி : " ஹ்ம்ம்"
ஜான் : "
முகில் கூடும் நேரமெல்லாம் உன்
முகம் பார்க்க தோணுதடி..
மழை விழும் சத்தமெல்லாம் உன்
மன மெட்டு கேட்குதடி...
இரும்புதிரையில் உன் பெயர் பார்த்தால் என்
இதய எடை கூடுதடி
குளிர் காற்றில் என் நடுக்கம் தணிய உன்
உஷ்ண சுவாசம் கேட்குதடி
நீர் இல்லா மேகம் போல
நீ இல்லா சொர்க்கம் வேண்டாம் ...
இருவரும் ஒரே பொழுதில் இருக்க ..
கைபேசி அற்ற உன் குரல் கேட்க ...
ஊடல் தவிர்த்த காதலாட...
காத்திருக்கிறேன் ..
"
பிரமி அவன் கவிதையில் கரைந்து கொண்டிருந்தாள் ...
கவிதைகளோடும் விசாரிப்புகளோடும் ஐந்து நாட்கள் ஓடின ...
"மாமனே உன்ன காணாம மத்தியில் சோறும் திண்ணாம ..."
ஜான் : " பிரமி ... உன்கிட்ட ஒன்னு சொல்லுவேன் ... நீ என்ன திட்டக் கூடாது .."
ஜான் தயங்கினான்...
பிரமி : "சொல்லு... "
ஜான் : " சொன்னதுக்கு அப்புறம் என்ன திட்டக் கூடாது ... தூரத்துல இருக்கறதால உன் ரியாக்ஷன் என்னவா இருக்கும் தெரியல ... "
பிரமி : " முடியல , என்ன விஷயம் சொல்லு ...."
ஜான் : " அசைன்மெண்ட் முடியல ... இன்னும் 2 வாரம் இங்க extend பண்ண சொல்றாங்க ..."
கனடாவிலும் சென்னையிலும் ஒரே சமயத்தில் கருமேகங்கள் கசிய காத்திருந்தன ...
- தொடரும் ...
No comments:
Post a Comment