Friday, February 14, 2014

கடைசி வரி ......



அந்த பெரிய ஹாலில் இளம் எழுத்தாளர் பிரபாகரனுக்கு பாராட்டு விழா நடைபெற்று கொண்டிருக்கிறது .


 "இங்கு அமர்ந்திருக்கும் பிரபாகரன் ஒரு பொறியியல் வல்லுநர் . இன்றைய சூழலில் அறிவியல் யதார்த்ததோடு தமிழ் நாவல்கள் இவரைப் போல யாராலும் எழத முடியாது. இவர் எழுதிய ' அமானுசம் அனாவசியம்நாவல் சாகத்திய அகாடமி விருது பெற்றிருப்பது நம் எல்லோருக்கும் பெருமை சேர்ப்பதாகும் .." அந்த மூத்த எழுத்தாளர் பேசி முடிக்க அனைவரும் பிரபாகரனை பாராட்டி விட்டு களைந்து சென்றனர்.


" சார் ! உங்க நாவல படிச்சேன் ரொம்ப நல்லா இருந்துச்சு , ஒரு சந்தேகம் ! உங்களுக்கு நிஜமாகவே பேய் ,அமானுசியங்கள்ள நம்பிக்கை  இல்லையா  ! உங்க புத்தகத்துல ரொம்ப காட்டமா அவைகளை கிண்டல் பண்ணியிருகீங்களே  ?" அசோக் பிரபாகரனை கேட்டான் .


" சார் ! அமானுஷியம் என்பதே  மனுஷன் பணம் சம்பாதிக்க கண்டுபிடிச்சது தான் , மத்தவன பயமுறுத்தி முட்டாள் ஆக்குற விஷயம்  , கெட்ட மனுஷன் தான் சார் பேய் , மத்தபடி யாரும் அத பார்த்ததில்ல சார் " பிரபாகரன் சொன்னான் .


" ஆனால் இன்னும் அறிவியலாள கூட அமானுஷியங்கள் இல்லன்னு நிரூபிக்க முடியல சார் " அசோக் தொடர்ந்தான் .

"சார் இப்ப என்ன சொல்ல வர்றீங்க " பிரபாகர் சற்று கோபமாக கேட்டான் .


அசோக் ஒரு கட்டு காகிதங்களை வெளியே எடுத்தான்  " ஒன்னும் இல்ல சார் இந்த கதை ஒரு எழுத்தாளரால ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி எழுதபட்டது ... ஆனா இத முழுசா எழுதி முடிக்கறதுக்குள்ள அவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார் ...அதுக்கப்புறம் இந்த கதைய முழுசா எழுதி முடிக்க அவருடைய எழுத்து நண்பர்களும்  வாசகர்களும் எவ்வளவோ  முயற்சி செய்தனர் .... ஆனால் அவர்களும் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர் ...இத ஏன் உங்க கிட்ட சொல்றேன்னா இந்த கதையும் உங்க நாவல் மாதிரி அமானுஷியதுக்கு எதிரான கதை தான் ...



" இப்ப என்ன இந்த கதைய முழுசா நான் முடிக்கணும்  அதானே  , தாங்க  ..." காகிதங்கள புடுங்கிக்கிட்டு  வேகமாக  சென்றான் .

வீட்டிற்கு சென்று காகிதத்தை படித்தான், அதன் முதல் பக்கத்தில் " அந்த பெரிய ஹாலில் இளம் எழுத்தாளர் பிரபாகரனுக்கு பாராட்டு விழா நடைபெற்று கொண்டிருக்கிறது ....."

No comments:

Post a Comment