கேலி , கிண்டல் , ஓட்டுவது , பலப் தருவது போல சமீப காலமாக இளைஞ்சர்கள் மத்தியில் பெரிதாக பயன்படும் வார்த்தை "கலாய்ப்பது" .
18/9/2012 அன்று விஜய் தொலைக்காட்சியில் 'ஆண்-பெண் கலாய்த்தல்' என்ற தலைப்பில் ஒளிப்பரப்பாகிய "நீயா - நானா " நிகழ்ச்சியின் கருத்து பதிவு தான் இது .
தங்களை எரிச்சலடைய செய்யும் கலாய் எவை ? , தாங்கள் எவ்வாறு மற்றவர்களால் கலாயக்கப்பட்டிர்கள் ? போன்ற கேள்விகள் கேட்கப் பட்டது . நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் தங்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர் . நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதால் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை .
இறுதியாக தாங்கள் யாரை எல்லாம் கலாய்க்க விரும்புகிறீர்கள் ? என்று கேட்கப் பட்டது .
பெரும்பாலானோர் தாங்கள் " மிக ஒல்லியாக இருப்போரையும், கருப்பாக
இருப்போரையும், உடல் பருமனானவர்களையும் , உயரத்தில் மாறுப்பட்டு இருப்பவர்களையும் எளிதில் கலாய்த்து விடுவோம் " என்று கூறினர் .
வேறு சிலர் " எளிதில் உணர்வுகளை வெளிக்காட்டகூடியவர்களை
கலாய்க்க விரும்புவதாகவும் " கூறினர் . மற்றும் சிலர் " மொழி தெரியாதவர்களை கலாயப்பதாகவும் " கூறினர் .
" என்னடா இது இவங்களுக்கு பஞ்சாயத்து பண்ண வேறு தலைப்பே இல்லையா , இப்படி தேவை இல்லாத விஷயத்தை குறித்து எதுக்கு பேசனும்" ன்னு கேள்வி எழுந்தது . இதற்கான விடை விளம்பர இடைவேளைக்கு பின் தொடர்ந்த நிகழ்ச்சியில் கிடைத்தது .

No comments:
Post a Comment