சென்ற பதிவில் என் முதல் கதை " தற்கொலை " யை பதிவு செய்கிறேன் என்று கூறியிருந்தேன் . அதன்படி இதோ என் முதல் கதை .
குறிப்பு : தயவு செய்து இதயம் பலவீனமானவர்கள் , கர்ப்பிணி பெண்கள் , சிறுவர்கள் இந்த கதையை படிக்க வேண்டாம் .
நம்ம கதையோட ஹீரோ மிக பெரிய எழுத்தாளர் . எல்லோரும் பேப்பர் இல்லாம கதை எழுதறவங்கள பாத்திருபிங்க , பேனா இல்லாம கதை எழுதறவங்கள பாத்திருபீங்க ஆனா நம்ம ஹீரோ கதையே இல்லாம கதை எழுதுவாரு .
சின்ன வயசில் இருந்தே தனக்குள்ள தூங்கிகிட்டு இருந்த கவிஞ்சனை ஒரு கட்டத்தில் எழுப்ப வேண்டியதாயிற்று . ஒரு நாள் கல்லூரியில் தமிழ் பேராசிரியர் ' அம்மா ' என்ற தலைப்பில் கவிதை எழுத சொன்னார் . எல்லோரும் தங்கள் அம்மாவை வானம் , மலை , பூமி யோடு ஒப்புமைபடுத்தி முயற்சித்து கொண்டிருக்கையில் நம்ம ஹீரோவோ அம்மாவின் புகழ் பாடும் சினிமா பாடல்களில் இருந்து வரிகளை சுட்டு தன் கவிதையில் சொருகி கொண்டிருந்தார் .
அந்த பேராசிரியர் சினிமா அதிகம் பார்க்காதவர் போல " பராவா இல்ல ரொம்ப நல்லா எழுதி இருக்கியே , உனக்கு இலக்கிய துறையில நல்ல வாய்ப்பு இருக்கு" என பாராட்ட அன்றைக்கு ஆரம்பிததுங்க நம்ம ஹீரோ வோட முதல் இலக்கிய அத்தியாயம் .
தினமும் கவிதை , கட்டுரை , கதைன்னு எதாவது எழுதி கிறுக்கி தள்ளி கிட்டே இருப்பாரு . அட அதை கூட தாங்கிக்கலாம், ஆனா தான் எழுதிய மொக்கையை படிக்க சொல்லி மத்தவங்கள தொந்தரவு செய்வார் பாருங்க அதை தான் தாங்க முடியாது .
வேலை பார்க்கிற இடத்தில கூட blog ல கதை எழுதறேன் , கட்டுரை எழுதறேன்னு சொல்லி அலுவலக நேரத்தை வீண் அடித்து கொண்டிருப்பார் .
இவரு பண்ற அட்டகாசத்த தாங்க முடியாம இவர பார்த்தாலே இவரோட நண்பர்கள் எல்லாம் தல தெறிச்சி ஓட ஆரம்பிச்சிட்டாங்க .
அலுவலகத்தில் இவர வேளையில் இருந்து தூக்கிட்டாங்க .
ரொம்ப மனசு ஒடிந்து போன நம்ம ஹீரோ தற்கொலை பண்ணிக்கிட்டாரு .
அப்போ கூட நம்ம ஹீரோ சும்மா இல்லைங்க , "நேரா எழுதினா தானே திட்டுறாங்க , நம்ம இன்னொருத்தர் உடம்பில் இருந்து எழுதுவோம் " என்று ஒரு அப்பாவி உடம்பில் புகுந்து எழுத அராம்பிச்சிட்டாறு .
இதோ அவர் எழுதிய இன்றைய கதையின் முதல் வரி
"நம்ம கதையோட ஹீரோ மிக பெரிய எழுத்தாளர் . எல்லோரும் பேப்பர் இல்லாம கதை எழுதறவங்கள பாத்திருபிங்க , பேனா இல்லாம கதை எழுதறவங்கள பாத்திருபீங்க ஆனா .................................."

No comments:
Post a Comment