" சொந்தமா வலைபக்கமெல்லாம் தொடங்கியாச்சு , ஆரம்பிச்சா மட்டும் போதுமா தினமும் எதாவது பதிவுகளை போடணும் " னு நண்பர்கள் உசுபேத்தியத்தில் என்னுடைய முதல் கவிதையை பதிவு செய்தேன் .
"ஆஹா ஓஹோ "ன்னு பாரட்டலனாலும் நல்ல முயற்சின்னு எல்லோரும் சொன்னதால , ஏன் அடுத்த முயற்சியா ஒரு சிறு கதை எழுத கூடாதுன்னு
ஒரு எண்ணம் தோன்றியது , அதன் விளைவு தான் என் முதல் கதை.
"சிறு கதை எழுதனுமுன்னு ஆயாச்சு , எதாவது புதுசா யோசிச்சு எழுதணும் , அதே நேரத்தில் அதில் மக்களுக்கு நல்ல கருத்தும் இருக்கனமுன்னு " யோசித்ததில் தலை வலி தான் வந்தது , புது எண்ணம் எதுவும் தோன்றவில்லை .
" சரி எதாவது சிறுகதை எழுத்தாளர்களின் புத்தகங்களை படித்தாலாவது புது எண்ணம் கிடைக்கும்" என்று சுஜாதா , அகிலன் ஆகியோரது சிறுகதைகளை படிக்க ஆரம்பித்தேன் .
அவர்கள் கதைகளில் வரும் உவமைகளும் , வார்த்தை ஜாலங்களும் எவ்வளவு முயற்சி செய்தும் என் கதையில் அமைக்க முடியல . மேலும் அவர்கள் கதைகள் ஏற்படுத்திய தாக்கத்தாலோ என்னமோ புது எண்ணங்கள் தோன்றாமல் அவர்கள் கதைகளை தழுவிய கற்பனைகளே உதித்தன .
"அட போப்பா இதெல்லாம் நம்மால முடியாது " ன்னு மனசு ஒரு பக்கம் வடிவேலு மாதிரி வசனம் பேசினாலும் " நீ என்ன சின்ன வயசுல இருந்தே சிறு கதை படிச்சா வளந்த , நிறைய சினிமா பாரு எதாவது புது எண்ணம் கிடைக்கும் " ன்னு இன்னொரு பக்கம் விஜயகாந்த் போல வறண்டு பிடித்தது .
தமிழிலிருந்து , தெலுங்கு , ஹிந்தி , ஆங்கிலம் என அனைத்து மொழி திரைப்படங்களும் பார்த்ததில் உண்மையாகவே புது எண்ணம் உருவாகியது .
"இந்த முறை கதைய கண்டிப்பா முடிச்சிறனும் "ன்னு எழுதியதில் 'என் முதல் கதை' ஒரு சில எழுத்து பிழைகளுடன் நன்றாகவே இருந்தது.
கதையை மீண்டும் ஒரு முறை படித்து பார்க்கும் போது பெருமிதத்துடன் கூடிய ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது .
"கதை நல்லா வந்திருக்கு , நாளைக்கு ப்ளாக் ல போட்டுருவோம் , யாரவுது நம்ம கதைய படிச்சுட்டு பத்திரிக்கைல தந்துட்டங்கனா , அப்புறம் மாநில விருது , தேசிய விருது , நோபில் பரிசு ..... அதுக்கப்புறம் சினிமால கதை எழுத கூப்பிடுவாங்க , கண்டிப்பா ரஜினிக்கு ஒரு கதை எழுதனும் ..... அப்புறம் ஆஸ்கார் இதோ ரஹ்மான் உங்க கூட நானும் வரேன் " மனம் கற்பனை வானில் சிறகடிக்க ஆரம்பித்தது .
" எதுக்கும் நம் நண்பர்களிடம் ஒரு முறை காட்டி நம்மை அவர்கள் புகழ்வதை காதால் கேட்டு கொள்வோம் " என்று தமிழ் தெரிந்த நண்பர்களிடம் காட்டினேன் .
" மச்சி என்னடா கதை மொக்கையா இருக்கு , உனக்கு எதுக்குடா இந்த வேல " என்று வெளிப்படையாக சில நண்பர்களும் " பரவாயில்ல நல்லா இருக்கு ஆனா ஏதோ குறையற மாதிரி இருக்கு " ன்னு நாசூக்காக சில நண்பர்களும் " டேய் இது ஒரு படத்தோட கதை யார யாமத்த பாக்குற போ " ன்னு சில துப்பறியும் நண்பர்களும் என் கதைக்கான விமர்சனத்தை வாரி வழங்கினர் .
"அவ்வளவு மோசமாவா எழுதியிருக்கோம் , ச்சே நல்ல வேல ப்ளோக்ல போடல " என்று என்னை திட்டி கொண்டே என் ஆஸ்கார் கனவுகள் கரைந்தன .
என் கதையோட பெயரை சொல்ல மறந்துட்டேன பெயர் " தற்கொலை " .
குறிப்பு :
என் முதல் கதை "தற்கொலை "யை அடுத்த முறை பதிவு செய்றேன் .
நீங்களாவது படிச்சிட்டு நல்ல கருத்தா சொல்லுங்க .
This comment has been removed by the author.
ReplyDeletethanks for giving your valuable comments
ReplyDelete